Politics
விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழிபாடு நடத்துவற்கான ஆலோசனை கூட்டம் சப் கலெக்டர் உத்கர்ஷ்குமார் தலைமையில் நடந்தது.
தாசில்தார்கள் உசிலம்பட்டி கார்த்திகேயன், பேரையூர் முகிபாலன், டி.எஸ்.பி. ஜெயகணேஷ், பேரையூர் ஏ.எஸ்.பி., அஸ்வினி, போலீசார், வழிபாடு நடத்தும் அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.
உசிலம்பட்டி, எழுமலை பகுதிகளில் கடந்தாண்டு அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே இந்தாண்டும் அனுமதி வழங்கப்படும். சிலை வைக்கும் இடத்திற்கு தீயணைப்பு, வருவாய், காவல், மாசுக்கட்டுப்பாடு துறையினர் சான்று பெற வேண்டும். முதலுதவி பெட்டி வைக்க வேண்டும். சிலை பாதுகாப்புக்காக 2 பேர் இருக்க வேண்டும். பத்து அடிக்கு மேல் சிலை இருக்க கூடாது.
வெடிபொருட்கள் உபயோகிக்க கூடாது. ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். கரைப்பதற்கு முன் சிலைமீதுள்ள அலங்கார பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். எனவே அமைதியாக வழிபாடு நடத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.