Politics
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாில், விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
திருக்கோவிலுார் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட திருக்கோவிலுார் மற்றும் உளுந்துார்பேட்டை தாலுகாவைச் சேர்ந்த இந்து முன்னணி மற்றும் விநாயகர் சிலை அமைப்பாளர்கள் பங்கேற்ற பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.
தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். பொறுப்பு ஆர்.டி.ஓ., செந்தில்குமார் தலைமை தாங்கி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், வழிகாட்டு நெறிமுறைகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.
கூட்டத்தில் இந்து முன்னணி மற்றும் விநாயகர் சிலை அமைப்பாளர்கள், போலீசார் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஆர்.டி.ஓ., முருகன் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி., கலையரசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி எவ்விதமான சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் அமைதியான முறையில் நடத்தி முடித்திட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என விழா குழுவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், சத்யன், தாசில்தார் சேகர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் விஜய், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சையத்காதர், தீயணைப்பு நிலைய அலுவலர், மாசு கட்டுப்பாட்டு வாரிய ஆய்வாளர் மற்றும் விநாயகர் சிலை வைத்து வழிபடும் விழா குழுவினர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.