Politics
விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆலோசனை
கோவை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போலீஸ் கமிஷனர் கண்ணன் தலைமையில் இந்து அமைப்புகள், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம், நேற்று கமிஷனர் அலுவலக அரங்கில் நடந்தது.
சிலை நிறுவுதல், வழிபாடு, ஊர்வலம் மற்றும் சிலைகளை கரைக்கும் இடங்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு இடையூறின்றி, போக்குவரத்து நெரிசலை தவிர்த்து, போலீசார் அனுமதித்த வழித்தடங்களில் மட்டும் ஊர்வலம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.
பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து, வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றி அமைதியாக நடத்த கேட்டுக்கொள்ளப்பட்டது.
பிரச்னை அல்லது அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது.
துணை கமிஷனர் தங்கதுரை, போக்குவரத்து துணை கமிஷனர் மகேஸ்வரன் உள்ளிட்ட போலீசார் பங்கேற்றனர்.