Politics
விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
குமாரபாளையம்:விநாயகர் சிலை வைப்பவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில், 25 விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன.
குமாரபாளையத்தில், விநாயகர் சிலைகள் வைப்பவர்களுக்கு இன்ஸ்பெக்டர் தாமரைசெல்வன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், ஆர்.டி.ஓ., வசம் அனுமதி பெற வேண்டும். சிலை வைக்கும் இடம் தனியார் இடமாக இருந்தால் அவரது ஒப்புதல் கடிதம் பெற வேண்டும்.
நிலைய அதிகாரி வசம் தடையின்மை சான்று தர வேண்டும். சிலை அமைக்கும்
இடத்தில் மின்விளக்கு வைக்க, மின்வாரியத்தில் அனுமதி பெற வேண்டும்.
களிமண்ணால் செய்யப்பட்ட சிலையாக இருக்க வேண்டும். எவ்வித ரசாயன
கலப்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 25 விதிமுறைகள்
அறிவிக்கப்பட்டன.