தேர்தல் பணியை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
செங்கல்பட்டு, செப். 10– மதுராந்தகம் சட்டசபை தொகுதி இடைத்தேர்லுக்கான பணிகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு,
மதுராந்தகம் சட்டசபை தொகுதி இடைத்தேர்லுக்கான பணிகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு, கலெக்டர் வீரப்பன் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மதுராந்தகம் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியுள்ளது. காலை 11:00 முதல் மாலை 3:00 மணி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக வீடியோ மூலம் கண்காணித்து பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், சுயேச்சை வேட்பாளர் ஒருவர் மட்டும், மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் நரேந்திரனிடம் தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அதைதொடர்ந்து, செங்கல்பட்டு அடுத்த, ஆத்துார் கிராமத்தில் உள்ள, சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வீரப்பன் நேற்று, ஆய்வு செய்தார்.






