Politics
தேர்தல் புகார் எண்கள் வெளியீடு
செங்கல்பட்டு, செப்.15– ‘மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக மேற்பார்வையாளர்களிடம் புகார்
‘மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக மேற்பார்வையாளர்களிடம் புகார் அளிக்கலாம்’ என, செ ங்கல்பட்டு கலெ க்டர் வீரப்பன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு கலெக்டர் வெளியிட்ட அறிக்கை:
மதுராந்தகம் தனி தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் அக்., 6ம் தேதி, நடக்கிறது. இந்நிலையில், கடந்த வாரம் மூன்று மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தேர்தல் தொடர்பான புகார்களை, செங்கல்பட்டு அரசு விருந்தினர் மாளிகையில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
அதன்படி தேர்தல் மேற்பார்வையாளர்களின் மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கிரிஜா சங்கர் ஜெய்ஸ்வால் - – 98945 82390
வாவல் வைபவ் பாலாசாகேப் – 7200964217 ஆகியோரிடம் புகாரளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.