Politics
இடைத்தேர்தல்: 3 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
செங்கல்பட்டு:மதுராந்தகம் தொகுதி இடைதேர்தலுக்காக, தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் அக்., 6ம் தேதி, நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் வீரப்பன் நேற்று ஆய்வு செய்தார். தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க ஒன்பது குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மூன்று தேர்தல் மேற்பார்வையாளர்களை நியமித்து தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.
அதன்படி தேர்தல் மேற்பார்வையாளர் போர்சிங் யாதவ், காவல் கண்காணிப்பு பார்வையாளர் கிரிஜா சங்கர், தேர்தல் செலவின மேற்பார்வையாளர் வாவல் வைபவ் பாலாசாகேப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் தொடர்பான புகார்களை, பொதுமக்கள், அரசியில் கட்சியினர், தேர்தல் மேற்பார்வையாளர்களிடம் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.