Politics
இடைத்தேர்தல் பணியால் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு
செங்கல்பட்டு, செப். 11– மதுராந்தகம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலையொட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு
மதுராந்தகம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலையொட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக கலெக்டர் வீரப்பன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன் வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில், செப்., மாதத்தில், இரண்டாவது வாரம் நடைபெறும்.
இந்த கூட்டம், செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வரும் 16ம் தேதியும், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வரும் 25ம் தேதி, நடக்கி இருந்தது.
இதற்கிடையில், மதுராந்தகம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தற்காலிகமாக மூன்று சிறப்பு குறைதீர் கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுகிறது. இடைத்தேர்தல் முடிந்தபிறகு, குறைதீர் கூட்டம் நடத்துவது குறித்து, தெரிவிக்கப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
