அங்கன்வாடி ஊழியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
கடலுார்: கடலுாரில் தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் வசந்தா தலைமை தாங்கினார். லில்லி, பிரேமா, விண்ணரசி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கலைசெல்வி துவக்க உரையாற்றினார். தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ரங்கசாமி கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் வாழ்த்தி பேசினர்.
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்து பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.





