Arts, culture, entertainment and media
கள்ளக்குறிச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட பொருளாளர் பரித்தா பேகம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்து உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.
ஊழியர் விரோத போக்கை கடைபிடிப்பதை கைவிட வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த தகுதியுடைய அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தை மறு நிர்ணயம் செய்ய வேண்டும். மினி அங்கன்வாடி ஊழியர்களுக்கு தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். காய்கறி, மளிகை, உருளைக் கிழங்கு, பிறந்த நாள் இனிப்பு உள்ளிட்ட தொகைகளை விலை வாசிக்கேற்ப உயர்த்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக் கைகள் வலியுறுத்தப் பட்டன.