Arts, culture, entertainment and media
பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம்
கோவை: தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய நிலையை மாற்றி, வழங்கப்படும் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்து, அரசு ஊழியர்களுக்கான பணி பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும்.
மாநிலம் முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம், உதவியாளர்களுக்கு ரூ.7 ஆயிரம் பணிக்கொடை வழங்க வேண்டும், பணிக்காலத்தில் இறந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.