Arts, culture, entertainment and media
அங்கன்வாடி ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
நாமக்கல்; ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உத-வியாளர் சங்கத்தினர், நேற்று மாலை, நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் அனுராதா தலைமை வகித்தார். செயலாளர் ஜெயக்கொடி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தங்கராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், அங்-கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம், பணி பாது-காப்பு வழங்க வேண்டும்.
காலி பணியிடங்களை நிரப்பி, இரட்டை பணிச்-சுமையை குறைக்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்தோருக்கு, பதவி உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக, 6,750 ரூபாய் விலைப்படியுடன் இணைத்து வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு, 10 லட்சம் ரூபாய், உதவியாளர்களுக்கு, ஏழு லட்சம் ரூபாய் பணிக்-கொடையாக வழங்க வேண்டும். ஆண்டுக்கு, நான்கு காஸ் சிலிண்டர்களை அரசே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்-கைகளை வலியுறுத்தி கோசம் எழுப்பினர். சங்க பொருளாளர் பூங்கொடி மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் திரளாக பங்கேற்-றனர்.