Arts, culture, entertainment and media
அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: தமிழ்மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உத-வியாளர் சங்கத்தின் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், மாலை நேர கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் நோஹிரா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முனியம்மாள், செயலாளர் பார்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் அனிதா நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்களுக்கு லெவல்-6, மினி அங்கன்வாடி ஊழியர்களுக்கு லெவல்-5, உதவியாளர்களுக்கு லெவல்-4, ஊதிய நிலை வழங்க வேண்டும். ஊதிய விகி-தத்தை மாற்றி, பின்னர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உத-வியாளர்களை பணி நிரந்தரம் செய்து, அரசு ஊழி-யர்களுக்குரிய பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும். உள்ளூர் பணி மாறுதல், 2019லிருந்து வழங்-காமல் உள்ளதால், ஊழியர்கள் மற்றும் உதவியா-ளர்கள் மிகவும் சிரமத்துடன் உள்ளனர்.
குறைந்தது, 10 முதல், 40 கி.மீ., வரை பஸ் வசதி இல்லாமல், நேரத்திற்கு மையத்திற்கும், வீட்-டிற்கும் செல்ல முடியாமல் கடந்த,
7 ஆண்டுகளாக மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகவே, உடனடியாக உள்ளூர் பணி மாறுதல் வழங்கி, ஊழியர்களை இந்த சிரமத்திலிருந்து விடுவிக்க வேண்டும்.
மாநிலம் முழுவதுமுள்ள காலிப்பணியிடங்-களை உடனடியாக நிரப்பி, இரட்டை பணிச்சுமை-களை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.