Arts, culture, entertainment and media
அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கரூர்; தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி-யாளர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் பத்மா-வதி தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்-களாக அறிவிக்க வேண்டும், ஊதிய விகிதத்தை மாற்றி, நிலுவைத்தொகை வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு உதவித்தொகை சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்-கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர், உதவி-யாளர்கள் பங்கேற்றனர்.