மருத்துவக் கொள்ளையை அம்பலமாக்கும் துக்காராம் முண்டே- மகாராஷ்டிராவிலும் ஒரு 'சகாயம்'
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் உள்நோயாளி பிரிவில் உள்ள நோயாளிகளிடம் அத்தியாவசிய மருத்துவக் கருவிகளுக்கு அப்பட்டமாக அரங்கேறும் மிக மோசமான விலைக் கொள்ளையை மகாராஷ்டிர மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.
மாநில விலை கண்காணிப்பு ஆதாரப் பிரிவு நடத்திய விரிவான சந்தை ஆய்வில், மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் அவசியமான உபகரணங்கள் அவற்றின் அசல் கொள்முதல் விலையை விடப் பல மடங்கு கூடுதல் விலைக்கு நோயாளிகளுக்கு விற்கப்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த அநியாய விலையேற்றத்தை முற்றிலும் நியாயமற்றது என்று சாடியுள்ள மகாராஷ்டிர எஃப்டிஏ கமிஷனர் துக்காராம் முண்டே, இதில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் மற்றும் தரவுகள் நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. ஒரு நோயாளிக்கு குளுக்கோஸ் போன்ற திரவங்களைச் செலுத்தப் பயன்படும் 'மெடிபியூஷன் ஐவி செட்' ஒன்றின் அசல் கொள்முதல் விலை வெறும் 11 ரூபாய் 5 காசுகள் மட்டுமே ஆகும். ஆனால், அது மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு 325 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது 2,841 சதவீதம் என்ற அசுரத்தனமான லாப வரம்பைக் குறிக்கிறது. இதேபோல், லைவோபியூஷன் நிறுவனத்தின் ஐவி செட்களும் 2,091 சதவீத கூடுதல் லாபத்திற்கு விற்கப்படுகின்றன.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)






