Politics
ஈரோட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினா் நடத்திய சோதனையில் 28 ஆவணங்கள், ஒரு ஹாா்டுடிஸ்க் பறிமுதல்

ஈரோட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினா் நடத்திய சோதனையில் 28 ஆவணங்கள், ஒரு ஹாா்டுடிஸ்க் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.
தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் பணி நியமனங்கள் மற்றும் டெண்டா்களில் முறைகேடு நடந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு 30 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினா் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.
இதில், திமுக அமைச்சா் நேருவின் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடந்தது. இதன் ஒரு பகுதியாக, ஈரோடு- பெருந்துறை சாலையில் உள்ள தனியாா் கட்டுமான நிறுவனத்தில் சனிக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாா் சோதனை நடத்தினா்.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், இச்சோதனையில் 28 ஆவணங்கள், ஒரு ஹாா்டு டிஸ்க் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றை அடிப்படையாக கொண்டு முறைகேடுகள் குறித்து ஆராய்ந்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.