Politics
சென்னை, திருச்சி உள்ளிட்ட 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு. இவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, அடையாறு, திருவான்மியூர் என 19 இடங்களிலும் சோதனை நடந்தது.
சென்னையில் ரவிச்சந்திரன் அலுவலகத்திலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். திருச்சி தில்லை நகரில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர்.
அரசு டெண்டர்களில் கட்சி நிதி என்ற பெயரில் சட்டவிரோதமாக நடந்த வசூல் தொடர்பாக சோதனை நடத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
களத்தில் தினமலர்!
திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
நேரு வீட்டில் ரெய்டு; கொந்தளித்த ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு அறிக்கையில் கூறியிருப்பது என்ன; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு