Politics
த.வெ.க.,வின் பூச்சாண்டிக்கு அஞ்ச மாட்டோம்: ஸ்டாலின்
சென்னை: 'கே.என்.நேரு இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடக்கும் நிலையில், த.வெ.க., அரசின் பூச்சாண்டிகளுக்கு அஞ்ச மாட்டோம்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது; சட்டசபை கூட்டத்தொடரும் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே, தி.மு.க., முதன்மைச் செயலர், கே.என். நேரு மீதான சோதனை நடவடிக்கையை, த.வெ.க., அரசு மேற்கொண்டுள்ளது.
ஆட்சி அமைக்க, மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டசபை வளாகத்திலேயே, அவர்களை த.வெ.க.,வில் சேர்த்து குதிரை பேரம் நடத்தினர்.
அது தொடர்பான புகார்களில், லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை கூட இதுவரை பதியவில்லை. இவற்றை எல்லாம் தமிழக மக்கள் நன்கு அறிவர்.
இந்திய ஜனநாயகத்தின் இருண்ட பக்கமாய், இந்த போக்கு தொடரும் நிலையில், வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையை, த.வெ.க., அரசு கையில் எடுத்துள்ளது.
புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கு எல்லாம் தி.மு.க.,வும், நேருவும் அஞ்ச மாட் டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.