சென்னையில் துலீப் கோப்பை இறுதிப்போட்டி: தெற்கு மண்டல அணியில் கே.எல்.ராகுல், படிக்கல், சிராஜ் சேர்ப்பு
சென்னை,இலங்கை சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய வீரர்களான கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் கிழக்கு மண்டல அணி
இலங்கை சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய வீரர்களான கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் கிழக்கு மண்டல அணிக்கு எதிரான துலீப் கோப்பை இறுதிப்போட்டிக்கான தெற்கு மண்டல அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இறுதிப்போட்டி செப்டம்பர் 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
துலீப் கோப்பை இறுதிப்போட்டியில் தெற்கு மண்டலம் மற்றும் கிழக்கு மண்டலம் அணிகள் 2-வது முறையாக நேருக்கு நேர் மோத உள்ளன.








