Sport
துலீப் கோப்பை இறுதிப்போட்டி: 584 ரன்கள் முன்னிலையுடன் சாம்பியன் பட்டத்தை நெருங்கும் கிழக்கு மண்டலம்!

372 ரன்கள் முன்னிலை பெற்றபோதிலும், கிழக்கு மண்டலம் அணி எதிரணிக்கு 'ஃபாலோ-ஆன்' (Follow-on) வழங்காமல் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது.
துலீப் கோப்பை இறுதிப்போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் கிழக்கு மண்டல அணி 584 ரன்கள் என்ற பிரம்மாண்ட முன்னிலையைப் பெற்று, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுவதை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது. கேப்டன் இஷான் கிஷன் மற்றும் ஷிகர் மோகன் ஆகியோரின் அரைசதங்கள் கிழக்கு மண்டல அணியின் ஸ்கோரை உயர்த்தின.
