Sport
துலீப் கோப்பை: இரட்டை சதம் விளாசிய இஷான் கிஷன்; வலுவான நிலையில் கிழக்கு மண்டலம்!

துலீப் கோப்பை இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டலம் அணியின் கேப்டன் இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசி அசத்தினார்.
இரட்டை சதம் விளாசிய மகிழ்ச்சியில் கேப்டன் இஷான் கிஷன் - படம் | தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (எக்ஸ்)
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கிழக்கு மண்டலம் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
ஆட்டத்தின் இரண்டாம் நாளான இன்று தேநீர் இடைவேளையின்போது, கிழக்கு மண்டலம் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 626 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
Ishan Kishan brings up his 2ï¸â£0ï¸â£0ï¸â£ in style ð¯ð¯ ð
What a magnificent knock from the East Zone captain so far ðð
Scorecard â¶ï¸ https://t.co/KQf5Km69nk#DuleepTrophy | #SZvEZ pic.twitter.com/2NaE6qG4VK
மிகவும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசி அசத்தினார். அவர் 301 பந்துகளில் 250 ரன்கள் எடுத்து ரிட்டையர்டு ஹர்ட் ஆனார். அதில் 27 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, குமார் குஷாக்ரா 101 ரன்கள், ஷிகார் மோகன் 85 ரன்கள், அபிமன்யு ஈஸ்வரன் 72 ரன்கள் எடுத்தனர். அனுகுல் ராய் 45 ரன்கள், வைபவ் சூர்யவன்ஷி 44 ரன்கள் எடுத்தனர்.
தெற்கு மண்டலம் தரப்பில் திரிபுரனா விஜய் மற்றும் சமா வி மிலிண்ட் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஷேக் ரஷீத் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
East Zone captain Ishan Kishan dazzled by smashing a double century in the Duleep Trophy final.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.