பாதாள சாக்கடை மேல் மூடி சேதம் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
திருவள்ளூர்: திருவள்ளூர் ஜெ.என்.சாலையில் சேதமடைந்த பாதாள சாக்கடை மேல் மூடியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் நகராட்சியில் உள்ள வீடுகளில் சேகரமாகும் கழிவு நீர், பாதாள சாக்கடை திட்டம் வழியாக வெளியேற்றப்படுகிறது. இதற்காக, நகராட்சி பகுதியில் உள்ள 27 வார்டுகளிலும், புதை குழாய் அமைக்கப்பட்டு, தேவி மீனாட்சி நகர் அருகில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால், அதை நீக்குவதற்காக ஆங்காங்கே மூடி அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் மீது கான்கிரீட் மூடி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜே.என்.சாலையில், ஆயில் மில் அருகில் உள்ள பாதாள சாக்கடை மேல் மூடி, வாகனங்களின் அழுத்தம் காரணமாக உடைந்துள்ளது.


