Health
சேதமடைந்த பாதாள சாக்கடை மூடி அச்சத்தில் செல்லும் வாகன ஓட்டிகள்

கரூர்:கரூரில் பல இடங்களில் பாதாள சாக்கடை மூடிகள் சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
மாநகராட்சி பகுதியில், பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
அதில், அடைப்பு மற்றும் சாக்கடை கழிவுகள் வெளியேறும்போது, அதை சரி
செய்ய சாலையில் வட்ட வடிவில், துவாரம் போடப்பட்டு, சிமென்ட் மூடி
பொருத்தப்பட்டுள்ளது.
பகுதியில், பல இடங்களில் பாதாள சாக்கடை மூடிகள் சேதமடைந்துள்ளது.
அதில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. இதனால்,
வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சராகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, அந்தந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், மாநகராட்சி
கவுன்சிலர்களிடம் புகார் செய்தும் பயனில்லை. மாநகராட்சி நிர்வாக
அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.
கூறியதாவது: கரூர் நகரில் அடிக்கடி பாதாள சாக்கடை குழாயில் ஏற்படும்
அழுத்தம் காரணமாக, பல முறை சாலையில் பள்ளம் விழுந்துள்ளது. குறிப்பாக,
கோவை சாலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை, அண்ணா வளைவு மற்றும் ராஜாஜி சாலையில்
பலமுறை பள்ளம் விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது,
மேலும், பல இடங்களில் பாதாள சாக்கடை மூடிகள் சேதம் அடைந்துள்ளது.
இதனால், பெரியளவில் பள்ளம் விழுந்து பாதிப்பு ஏற்படும் முன், சரிந்த
பாதாள சாக்கடை மூடிகளை சீரமைக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.