ரயில்களில் கடத்தி வந்த 50 கிலோ புகையிலை பறிமுதல்
சேலம்; கத்ரா - கன்னியாகுமரிசாகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று, மொம்மிடி - சேலம் இடையே வந்து கொண்டிருந்தபோது, சேலம் உட்கோட்ட தனிப்-படை போலீசார் சோதனை செய்தனர்.
முன்பதிவற்ற பெட்டியில் கழிப்பறை அருகே, கேட்பாரற்ற நிலையில் ஒரு சாக்கு பை கிடந்தது. அதை திறந்து பார்த்தபோது, 24 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன.
அதேபோல் ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கிடந்த பையில், 14.5 கிலோ புகையிலை பொருட்கள்; பாட்னா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் கிடந்த பையில், 2 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. 3 ரயில்களில், 40.5 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்-தனர். அவர்கள் வழக்குப்பதிந்து, கடத்தி வந்த-வர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.மேலும் டாடா நகர் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில், 200 கிராம் கஞ்சா சாக்லெட்; 2 கிலோ புகையிலை பேஸ்ட்; 8.3 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.






