ரயிலில் கடத்தப்பட்ட புகையிலை பறிமுதல்
சேலம்: பிலாஷ்பூர் - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலில், தனிப்படை போலீசார், காட்பாடி முதல் சேலம் வரை, நேற்று சோதனை நடத்-தினர். அப்போது முன்பதிவற்ற பொது பெட்டி கழிப்பறை அருகே கேட்பாரற்ற நிலையில் கிடந்த பையை எடுத்து சோதனை செய்தனர். அதில், 8.5 கிலோ புகையிலை பேஸ்ட் இருந்ததால், பறிமுதல் செய்தனர்.
அதேபோல் டாடா நகர் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்-பாரற்ற நிலையில் கிடந்த பையை எடுத்து பார்த்ததில், 1.5 கிலோ புகையிலை பேஸ்ட், 1.5 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து, சேலம் ரயில்வே போலீ-சாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், ரயிலில் கடத்தி வந்தவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.