கஞ்சா விற்பனை பீகார் வாலிபர் கைது
சேலம்:சேலம் மதுவிலக்கு போலீசார், நேற்று முன்-தினம் ஜங்ஷன் பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்-படி நின்று கொண்டிருந்த வாலிபரிடம் விசா-ரணை நடத்தினர்.
அதில் அவர், பீகார் மாநிலம், நிமுல் சுவாஷ்லி பகுதியை சேர்ந்த ேஷக் இம்ரத், 22, என்பதும், பீகாரில் இருந்து ரயிலில் சேலம் வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்ததில், 1.1 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபி-டிக்கப்பட்டது. ஜங்ஷனில் இருந்து நாமக்கல் செல்ல இருந்ததும், அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்றதும் தெரிந்தது. பின்னர் கஞ்-சாவை பறிமுதல் செய்து, அவரை போலீசார் கைது செய்தனர்