115 கிலோ புகையிலை பறிமுதல் காரில் கடத்திய ராஜஸ்தானி கைது
சேலம்:சேலம், வீராணம் போலீசார் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வந்த, எஸ்.யு.வி., காரை நிறுத்தி
வீராணம் போலீசார் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது
வந்த, எஸ்.யு.வி., காரை நிறுத்தி சோதனை செய்தபோது, புகையிலை
பொருட்கள் இருந்தன.
விசாரணையில் டிரைவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த
துங்காராம், 28, என்பதும், பெங்களூருவில் இருந்து கடத்தி வந்ததும்
தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 50,000 ரூபாய் மதிப்பில், 115
கிலோ புகையிலை பொருட்கள், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரை, பறிமுதல்
செய்தனர். தொடர்ந்து அவர் யாருக்கு வினியோகிக்க, புகையிலை
பொருட்களை கடத்திச்சென்றார் என, விசாரணை நடக்கிறது.
உட்கோட்ட ரயில்வே தனிப்படை போலீசார், நியூடில்லி -
திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று சோதனை நடத்தினர்.
முன்பதிவற்ற பெட்டியில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த பையை பிரித்து
பார்த்தபோது, 20 கிலோ புகையிலை பொருட்கள், 800 கிராம் கஞ்சா சாக்லேட்
இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், சேலம் ரயில்வே
போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், ரயிலில் கடத்தி வந்தவர்கள்
குறித்து விசாரிக்கின்றனர்.
ஜெயந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று, ரயில்வே போதைப்பொருள் தடுப்பு
பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், பொதுப்பெட்டியில் கேட்பாரற்ற
நிலையில் கிடந்த பையை எடுத்து பிரித்து பார்த்தனர். அதில், 900 கிராம்
கஞ்சா சாக்லெட், 7 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரிந்தது.
அவற்றை பறிமுதல் செய்து ரயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை
நடக்கிறது.