ரயிலில் கஞ்சா, புகையிலை பறிமுதல் கஞ்சா சாக்லேட் கடத்திய பீகாரி கைது
சேலம்: சேலம் உட்கோட்ட ரயில்வே தனிப்படை போலீசார், டில்லி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று சோதனை நடத்தினர்.
முன்பதிவற்ற பொதுப்பெட்டியில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த பையை பிரித்து பார்த்ததில், 18 கிலோ புகையிலை பொருட்கள், 900 கிராம் கஞ்சா சாக்லேட் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்-தனர்.தொடர்ந்து அதே பெட்டியில் பயணித்த ஒருவரது பையை சோதனை செய்ததில், 400 கிராம் கஞ்சா சிக்கியது. விசார-ணையில் பீகாரை சேர்ந்த ேஷக் இம்ராத், 22, என்பதும், அவர் தான் புகையிலை, கஞ்சா சாக்லேட் கடத்தி வந்ததும் தெரிந்தது. இதனால் அவரை கைது செய்த போலீசார், சேலம் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதேபோல் பாட்னா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு கிலோ கஞ்சா, 3.7 கிலோ புகையிலை பொருட்கள்; டில்லி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில், 17 கிலோ புகையிலை பொருட்கள், 1.5 கிலோ கஞ்சா சாக்லேட்; சண்டிகர் - மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலில், 1 கிலோ கஞ்சா, கேட்பாரற்ற நிலையில் கிடந்ததால், தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து, சேலம் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்கள் விசாரிக்கின்றனர்.
மேலும் டாடா நகர் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில், 4.6 கிலோ புகையிலை பொருட்கள், 400 கிராம் புகையிலை பேஸ்ட்; திப்ருகர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில், 6 கிலோ புகையிலை; சில்ஷார் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில், 100 கிராம் கஞ்சா, 7 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், சேலம் ரயில்வே போலீசில் ஒப்படைத்து விசா-ரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இரும்பாலை போலீசார் நேற்று, சர்க்கார் கொல்லப்பட்டி கால்-நடை மருத்துவமனை பின்புறம் நேற்று ரோந்து சென்றபோது சந்-தேகத்துக்கு இடமாக ஒருவர் நின்றிருந்தார். அவரை சோதனை செய்தபோது, 85 'போதை' மாத்திரைகளை வைத்திருந்தார். அவற்றை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்ததில், அய்யம்பெ-ருமாம்பட்டி, பழையூர், கலர்பட்டியை சேர்ந்த செல்வராஜ், 29, என தெரிந்தது. அவரை கைது செய்தனர்.