பரமக்குடியில் கலெக்டர் ஏ.டி.ஜி.பி., ஆலோசனை
பரமக்குடி: பரமக்குடியில் செப்.,11ல் இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி ஏ.டி.ஜி.பி., மற்றும் கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.
பரமக்குடி பகுதியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவு இடம், மணி மண்டபம் மற்றும் முக்கிய பகுதிகளை பார்வையிட்டனர். தொடர்ந்து டவுன் ஸ்டேஷனில் உள்ள கூட்ட அரங்கில் சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனை செய்தனர். கலெக்டர் சிவகுரு பிரபாகரன், ஏ.டி.ஜி.பி., அன்பு, தென் மண்டல ஐ.ஜி., விஜயேந்திர பிதாரி, டி.ஐ.ஜி., மணிவண்ணன், எஸ்.பி., சந்தீஷ் மற்றும் ராமநாதபுரம் சிவகங்கை போலீஸ் உயர் அதிகாரிகள் இருந்தனர்.
இதே போல் கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தலைமையில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான் ஷீநிகம், பரமக்குடி சப்–கலெக்டர் வினோதினி ஆய்வு செய்தனர்.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)




