Politics
போலீஸ் ஆய்வுக் கூட்டம்
சிவகங்கை,செப்.10- பரமக்குடியில் நடைபெறவுள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்வை முன்னிட்டு
பரமக்குடியில் நடைபெறவுள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்வை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்துள்ள போலீஸ் அதிகாரிகளுடன் சிவகங்கை எஸ்.பி., அபிேஷக் குப்தா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
திருச்சி எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் முன்னிலை வகித்தார். செப்.11 அன்று மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடு, முக்கிய இடங்களில் கண்காணிப்பு, வாகனத் தணிக்கை, போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 3 எஸ்.பி.,க்கள் தலைமையில் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, வருவாய்த்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் மருத்துவத்துறை உள்ளிட்ட பணியாளர்களும் இந்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கூடுதல் எஸ்.பிக்கள் பிரான்சிஸ், சுகுமார், டி.எஸ்.பி., அமலஅட்வின் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்த வந்த போலீசார் கலந்துகொண்டனர்.