Politics
சிவகங்கை மாவட்டத்தில் 340 இடங்களில் பாதுகாப்பு
சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் இமானுவேல் சேகரன் நினைவு தினமான இன்று 340 இடத்தில் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மாவட்டத்தில் டி.ஐ.ஜி., வருண் தலைமையில் எஸ்.பி.,க்கள் அபிேஷக் குப்தா, டோங்கரே பிரவீன் உமேஷ் மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் 6 ஆன்லைன் செக்போஸ்ட், 32 வீடியோ கேமராவுடன் கூடி 16 செக்போஸ்ட்கள், 36 நான்கு சக்கர வாகனங்கள், 40 டூவீலர்களில் மொபைல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இது தவிர பதற்றமான பகுதியில் ட்ரோன் கேமராக்களில் காண்காணிப்பு பணியும் நடக்க உள்ளது. அஞ்சலி செலுத்த பரமக்குடி செல்பவர்கள் சொந்த வாகனத்தில் செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.