Politics
இமானுவேல் சேகரன் நினைவு நாள்: பாதுகாப்பு பணியில் 8000 போலீசார்
ராமநாதபுரம்: இமானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிமாட்ட போலீசார் 6500 பேர் உட்பட 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பிரச்னைக்குரிய 938 இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு அளிப்பர். விதி மீறல்களை தடுக்க மாவட்டம் முழுவதும் 38 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பரமக்குடி நகருக்கு வரும் பாதைகளில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த 44 கார்கள் மற்றும் 67 டூவீலர்களில் போலீசார் தொடர் ரோந்து பணியில் ஈடுபடுவர். பரமக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
மக்கள் வாடகை வாகனங்கள் மற்றும் திறந்த நிலை வாகனங்களில் வருவதற்கு அனுமதி இல்லை. டூவீலர், டிராக்டர், சரக்கு வாகனங்களில் வாகனங்களில் வரக்கூடாது. சொந்த வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.