புதிய சிந்தனைகளை வெளிப்படுத்த வாய்ப்பு
கோவை: மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் ‘வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் கலந்துரையாடல்–2027’ போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், ‘மேரா யுவா பாரத்’ அமைப்பு சார்பில் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பங்கேற்கலாம்.
முதற்கட்டமாக, ஆன்லைன் வினாடி–வினா போட்டி, வரும் 30ம் தேதி வரை mybharat.gov.in இணையதளத்தில் நடக்கிறது. இதைத்தொடர்ந்து கட்டுரை போட்டி, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தி, திறமையாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.





