விக்சித் பாரத் இளம் தலைவர் கலந்துரையாடல் நாமக்கல் மாவட்ட இளைஞர்களுக்கு அழைப்பு
நாமக்கல்:விக்சித் பாரத் இளம் தலைவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த
பாரத்' இளம் தலைவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், நாமக்கல்
மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம்' என, தேசிய இளைய தொண்டர்
ஜிஜேந்திரன், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கலை அறிவியல்
கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலுவலர் மோகன் ஆகியோர் தெரிவித்தனர்.
இதுகுறித்து, அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:
அரசின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ்
செயல்படும், 'மேரா யுவ பாரத்' அமைப்பு சார்பில், தேசிய அளவிலான,
'விக்சித் பாரத் இளம் தலைவர்கள் கலந்துரையாடல்-2027' போட்டி
நடக்கிறது.
இதில், விக்சித் பாரத் சேலஞ்ச், கலாசார பிரிவு, டிசைன்
பார் பாரத், சமூக நலனுக்கான ஹேக்கத்தான், இளம் தொழில்முனைவோர் சவால்,
இளைஞர் லோக்சபா ஆகிய, ஆறு முக்கிய பிரிவுகளில் போட்டி
நடத்தப்படுகிறது.
முதல் கட்ட வினாடி - வினா போட்டி, கடந்த ஆக.,
17ல் தொடங்கி வரும், 30 வரை நடக்கிறது. தொடர்ந்து கட்டுரைப்போட்டி,
மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் மற்றும் மாநில அளவிலான போட்டிகள்
நடக்கிறது. தேசிய அளவிலான இறுதி நிகழ்ச்சி, 2027 ஜன., 10 முதல், 12 வரை
டில்லியில் நடக்கிறது.
இளைஞர்கள், பங்கேற்க தகுதியுடையவர்கள். ஆர்வமுள்ளவர்கள்,
mybharat.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பதிவு செய்து
பங்கேற்கலாம். ஏற்கனவே, 'மை பாரத்' தளத்தில் பதிவு
செய்துள்ளவர்கள், மீண்டும் பதிவு செய்ய தேவையில்லை.
மாவட்டத்தை சேர்ந்த தகுதியான இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்று,
தங்களது திறமை மற்றும் புதுமையான சிந்தனைகளை, தேசிய அளவில்
வெளிப்படுத்தி, வளர்ந்த இந்தியா உருவாக்கத்தில் தங்களது
பங்களிப்பை வலுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
