பிரதமருடன் கலந்து பேச வாய்ப்பு
கோவை: மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மேரா யுவ பாரத் சார்பில், ‘விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் 2027’ என்ற தேசிய அளவிலான இளைஞர் திட்டம் செயல்படுகிறது.
இதில், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
முதல் கட்டமாக, விக்சித் பாரத் வினாடி வினா ஆன்லைன் போட்டி வரும் 30ம் தேதி வரை நடக்கிறது. 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் mybharat.gov.in இணையதளம் வாயிலாக பங்கேற்கலாம். மாவட்டத்தில் இதுவரை 9,000 பேர் பங்கேற்றுள்ளனர்.
மாவட்ட இளைஞர் அலுவலர் விக்னேஷ் கூறுகையில், 'கடந்த ஆண்டு நடந்த போட்டியில் மாவட்டத்தில் இருந்து 25 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அதிகம் பேர் பங்கேற்ற மாவட்டங்களின் பட்டியலில் கோவை முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றது. மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பிரதமருடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்படும். கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு பிரதமருடன் கலந்துரையாட வாய்ப்பு கிடைத்தது, 'என்றார்.
