இளையோர் வினாடி வினா
சிவகங்கை:மாவட்ட அளவில் இளைஞர்களுக்கான ஆன்லைன் வினாடி வினா போட்டி செப்., 30 வரை நடைபெறும் என நேரு யுவகேந்திரா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் கூறியதாவது: மத்திய அரசின் இளையோர் விவகாரம், விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் வளர்ந்த பாரதத்தின் இளம் தலைவர்கள் கலந்துரையாடல் தேசிய அளவில் துவக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சிவகங்கை மாவட்ட இளைஞர்களுக்கு ஆன்லைன் மூலம் செப்., 30 வரை வினாடி வினா போட்டி நடைபெறுகிறது. இதில் வயது 15 முதல் 29 க்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம். இதன் மூலம் வளர்ந்த பாரதத்தை உருவாக்கும் முயற்சியில் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். இம்மாவட்ட இளைஞர்கள் அனைவரும் அறிய வாய்ப்பை பயன்படுத்தி திறன்களை வளர்த்து, நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். ///