போட்டியில் பங்கேற்க அழைப்பு
ஊட்டி: நீலகிரி மாவட்ட இளைஞர் அலுவலர் விவேக் வெளியிட்டுள்ள அறிக்கை; வளர்ச்சியடைந்த பாரதத்தை
ஊட்டி: நீலகிரி மாவட்ட இளைஞர் அலுவலர் விவேக் வெளியிட்டுள்ள அறிக்கை;
வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிப்பதும், அவர்களுடைய புதிய சிந்தனைகள், கருத்துகள், படைப்பாற்றல், திறமைகள் மற்றும் புதுமையான எண்ணங்களை தேசக் கட்டமைப்பில் பயன்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டத்தின் முதல் கட்டமாக “விக்சித் பாரத் வினாடி வினா” போட்டி ஆன்லைன் முறையில் கடந்த 17ம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை மேரா யுவா பாரத் இணையதளமான www.mybharat.gov.in வாயிலாக நடைபெற்று வருகிறது. இதில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பங்கேற்க தகுதியுடையவர்கள். இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் கட்டுரை எழுதுதல், ஓவியம், நாட்டுப்புற நடனம், நாட்டுப்புறப் பாடல், பேச்சுப் போட்டி, கவிதை எழுதுதல் உள்ளிட்ட பல்வேறு கலாசாரப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
