மண்டல கபடி போட்டிக்கு விருதையில் தேர்வு முகாம்
விருத்தாசலம்: மண்டல கபடி போட்டிக்கான வீரர்கள் தேர்வு முகாம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது.
இதில், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களை சேர்ந்த அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 175 மாணவர்கள், 125 மாணவிகள் என 300 பேர் பங்கேற்றனர்.
இவர்களில், 14, 17, 19 வயதை சேர்ந்த மாணவர் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியே தேர்வு போட்டி நடத்தப்பட்டது.




