Sport
மாநில கபடி போட்டிக்கு பண்ருட்டி மாணவர்கள் தேர்வு
பண்ருட்டி:மாநில அளவிலான கபடி போட்டிக்கு பண்ருட்டி திருவள்ளுவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டிக்கு வீரர்கள் தேர்வு முகாம் மண்டல அளவில் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
அதில் கடலுார் மண்டல அளவிலான போட்டி விருத்தாசலம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
அதில் பங்கேற்ற நண்ருட்டி திருவள்ளுவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ரஹ்மான், பிரசாத், லோகேஷ்வரன் ஆகியோர் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை பள்ளி தாளாளர் சேரன் பாராட்டினார்.