Sport
மல்லர் கம்பம் போட்டி வரும் 12ம் தேதி துவக்கம்
விழுப்புரம்: தமிழக அரசு சார்பில் முதல்வர் கோப்பைக்கான மல்லர் கம்பம் போட்டி விழுப்புரம் மண்டல அளவில் வரும், 12ம் தேதி துவங்குகிறது.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர்களுக்கு இப்போட்டி நடக்கிறது.
இதில், வரும் 12ம் தேதி பள்ளி மாணவர்களுக்கும், 13ம் தேதி பள்ளி மாணவிகளுக்கு, 15ம் தேதி கல்லுாரி மாணவர்களுக்கும், 16ம் தேதி கல்லுாரி மாணவிகளுக்கும் இப்போட்டி நடக்கிறது.
இதில், பங்கேற்க விழுப்புரம் மண்டலத்தில் உள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், வேலுார், திருவண்ணாமலை, திருப்பத்துார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த 1500 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
தினந்தோறும் 9:00 மணிக்கு போட்டி துவங்குகிறது. வெற்றி பெறும் மாணவர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கப்படுகிறது.