Sport
மண்டல அளவிலான மல்லர் கம்பம் போட்டி
விழுப்புரம்: விழுப்புரத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டியில், மண்டல அளவிலான மல்லர் கம்பம் போட்டி நடந்தது.
விழுப்புரம் விளையாட்டு அரங்கில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று, மண்டல அளவிலான மல்லர் கம்பம் போட்டி துவங்கியது.
கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் துவக்கி வைத்தார். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலில் இருந்து, மல்லர் கம்பம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில்தான், மல்லர் கம்பம் போட்டியில் மாணவர்கள் சாதனைகளை படைத்து வருகின்றனர். இந்த மண்டல அளவிலான போட்டியிலும், விழுப்புரம் மாணவர்கள் சாதிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், மல்லர் கம்பம் பயிற்சியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.