‘தினமலர்– பட்டம்’ இதழை மாணவர் படித்தால் கலெக்டரை போல் உயர்ந்த பதவிகள் பெறலாம் மவுண்ட் பார்க் பள்ளி தாளாளர் மணிமாறன்
தினமலர் நாளிதழ் மாணவர்களுக்கு பல்வேறு கல்வி சேவைகளை வழங்கி வருகிறது. அதில் தற்போது பட்டம் இதழ் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது என மவுண்ட் பார்க் பள்ளி தாளாளர் மணிமாறன் பேசினார்
தியாகதுருகம் மவுண்ட் பார்க் பள்ளியில் நடந்த பட்டம் வினாடி வினா போட்டி நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் மணிமாறன் பேசியதாவது:
‘தினமலர்- பட்டம்’ வினாடி வினா போட்டியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நிர்வாக பணிகளுக்கு இடையே மாவட்ட ஆட்சியர் நம் பள்ளிக்கு நேரில் வந்துள்ளார். அவரை போல மாணவர்களாகிய நீங்களும் உயர்ந்த நிலையை அடைந்து பொது மக்களுக்கு சேவை புரிய வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் உங்களுடன் உரையாற்ற உள்ளார்.

