கள்ளக்குறிச்சி ‘தினமலர் -பட்டம்’ இதழ் வினாடி வினா போட்டி முதல் இரு இடங்களை பிடித்த மாணவர்கள் பேட்டி
கள்ளக்குறிச்சி ‘ தினமலர் –பட்டம்’ இதழ் வினாடி வினா போட்டியில், முதல் இரு இடங்களை பிடித்த மாணவர்கள் பேட்டி
முதலிடம் பிடித்த மாணவிகள்: பாட புத்தகம் படிப்பது மட்டும் அல்லாமல் ‘தினமலர் –பட்டம்’ இதழையும் தினந்தோறும் நான் ஆர்வமுடன் படித்து வருகிறேன். இதன்மூலம் உலகின் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், பழங்கால வரலாறு, நாட்டு நடப்புகள் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடிந்தது. பள்ளி பருவத்திலேயே உலகத்தரமான அறிவை பெற எனக்கு பட்டம் இதழ் உதவி செய்கிறது. பாட புத்தகத்தோடு, அறிவியல் வளர்க்கும் பட்டம் இதழையும் வாசிப்பதை வாடிக்கையாக மாற்றியுள்ளதால் நான், இந்த போட்டியில் வெற்றி படியை எட்ட முடிந்தது. பரிசை வென்றதில் எனக்கு மகிழ்ச்சி. இறுதி போட்டியிலும் நான் வெற்றி பெற்று சாதிப்பேன்.
எங்கள் பள்ளியில் ஆசிரியர்களின் முயற்சியினால் நான் பள்ளி பாடத்தில் சிறப்பு பெற்று வருகிறேன். அதேபோல் ‘தினமலர் –பட்டம்’ மூலமாக எனது பொது அறிவு வளர்ச்சியும் நன்றாக உள்ளது என்பதை, இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தெரிந்து கொண்டேன். இதன்மூலம் அனைத்து போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று உயர்ந்த பதவி வகிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இந்த வெற்றிக்கு உதவியாக இருந்த எனது உற்ற நண்பன் தினமலரின் பட்டம் அறிவியல் இதழுக்கு நன்றி கூறுகிறேன். பள்ளி முடிந்து கல்லுாரி சென்றாலும் பட்டம் இதழ் வாசிப்பதை நான் தொடர்ந்திடுவேன்.
புத்தகம் வாசிக்கும் பழக்கம் மட்டுமே உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லாது என்பது, ‘தினமலர் – பட்டம்’ இதழ் தினசரி வாசிக்க துவங்கியபின் நான் தெரிந்துகொண்ட உண்மை. எனவே உயர்ந்த இலக்கை அடைய பாட புத்தகம் மட்டுமில்லாமல், ‘தினமலர்–பட்டம்’ இதழ் வாசிப்பது முக்கிய பங்கு வகிக்கும். இது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக நான் புரிந்துகொண்ட உண்மையாகும். பல பயனுள்ள தகவல்களை தரும் பட்டம் இதழ், மாணவர்களுக்கு அரசு போட்டி தேர்வை எதிர்கொள்ள உதவியாக இருக்கும். பட்டம் இதழை முழுமையாக படிக்கும் பழக்கம் நம்மை வாழ்வின் வேறு நிலைக்கு எடுத்து செல்லும்.
என் வாழ்க்கையில் முன்னேற்றத்தின் முதல் படியாக இந்த வெற்றி எனக்கு அடையாளம் காட்டி உள்ளது. இதேபோல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை செய்வேன். நான் ‘தினமலர்–பட்டம்’ இதழ் வினாடி வினா போட்டியில், வெற்றி பெற்று கலெக்டரிடமிருந்து பரிசு பெற்ற நிகழ்ச்சி என்வாழ்வில் மறக்க முடியாத சம்பவமாக உள்ளது. இதேபோல் தொடர்ச்சியாக நான் சாதனைகளை பல செய்திடுவேன். பள்ளி ஆசிரியர்களை போல் அறிவியல் ஆசானாக உள்ள பட்டம் இதழால், போட்டி தேர்வுகளை எளிதில் சந்திக்கும் நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது. வாழ்வின் வெற்றி படிக்கட்டுகளாக உள்ள பட்டம் இதழை நான் மனமாற பாராட்டுகிறேன்.