Politics
மனுத்தாக்கல் இன்று நிறைவு
தாராபுரம்,:தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று, வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், தேர்தல் களத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என, எதிர்பார்க்கப்படுகிறது.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று தி.மு.க. வேட்பாளர் சுகன்யா தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.இன்று பானுமதி (அ.தி.மு.க.), சத்ய பாமா (த.வெ.க.), கார்த்திகா (நாம் தமிழர்), லட்சுமணன் (இ.கம்யூ.) தாக்கல் செய்கின்றனர். இதனால், தாராபுரம் தேர்தல் அலுவலக வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, பரபரப்பான சூழல் நிலவுகிறது. கடந்த தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்யபாமா, தனது பதவியை ராஜினாமா செய்து, இம்முறை த.வெ.க. சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார்.'பழைய செல்வாக்கும், புதிய கட்சியின் களப்பணியும் கொண்ட அவரை வீழ்த்த வேண்டும்' என்பதில் எதிர்தரப்பு தீவிர உத்திகளை வகுத்து வருகிறது.மேலும், பிரதான வேட்பாளர்களின் ஓட்டுக்களை பிரிக்கும் நோக்கில், ஒரே பெயரைக் கொண்ட பல 'டூப்ளிகேட்' சுயேச்சை வேட்பாளர்களை களமிறக்கும் அரசியல் தந்திரங்களும், இன்று அரங்கேற வாய்ப்புள்ளதால், தாராபுரம் இடைத்தேர்தல் களம் உச்சகட்ட சுவாரஸ்யத்தை எட்டியுள்ளது.