Politics
2 தொகுதி இடைத்தேர்தல் மனு தாக்கல் இன்று நிறைவு

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவடைகிறது.
இவ்விரு சட்டசபை தொகுதிகளில், வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், கடந்த 9ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இரு தொகுதிகளிலும் த.வெ.க., - தி.மு.க., - அ.தி.மு.க., - நா.த.க., - கம்யூனிஸ்ட் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து உள்ளன.
தி.மு.க., - த.வெ.க., வேட்பாளர்கள் உட்பட, 35 பேர் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனு தாக்கல் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். வேட்பு மனுக்கள் மீது, நாளை பரிசீலனை நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற, வரும் 19ம் தேதி கடைசி நாள்.
அதன் பின், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.