Politics
ராகுலை பிரதமர் வேட்பாளராக முதல்வர் விஜயே அறிவிப்பார்; காங்., அமைச்சர் நம்பிக்கை

திருச்சி: ''லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை, பிரதமர் வேட்பாளராக முதல்வர் விஜயே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்,'' என, காங்கிரசை சேர்ந்த, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறினார்.
திருச்சியில் அவர் கூறியதாவது: சட்டசபையில் தன் கருத்துகளை தெரிவிக்க, முதல்வருக்கு முழு உரிமையும், அதிகாரமும் உண்டு. கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் தான், முதல்வர் விஜய் நீண்ட நேரம் சட்டசபையில் பேசினார். முதல்வரின் இந்தப் பேச்சு, வரலாற்று சிறப்புமிக்க உரையாக அமைந்துள்ளது.
வரும், 2029 லோக்சபா தேர்தலில், ராகுல் தான் பிரதமர் வேட்பாளர்; இதில் மாற்றுக்கருத்து இல்லை. அவரவர் சார்ந்த கட்சியின் தலைவர்களை, பிரதமர் வேட்பாளராக கட்சியினர் கூறுவதில் தவறில்லை. ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என நான் பகிரங்கமாக கூறுகிறேன்.
தமிழக முதல்வர் விஜயும் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். 'இண்டி' கூட்டணியில் இடதுசாரிகள் இணைந்து செயல்படுவார்கள் என நம்பிக்கை உள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை அரசு கவனத்தில் கொண்டு, சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் மூலம் உரிய விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு