Politics
அதிமுக – அமமுக இணைவு? – டி.டி.வி. தினகரன் சொன்னது என்ன?

அதிமுக - அமமுக இணைக்கப்பட இருக்கிறது என தகவல்கள் வெளியான நிலையில், டி.டி.வி. தினகரன் இதற்கு பதில் கொடுத்துள்ளார்.
இடைத்தேர்தலில் தவெக-வுக்கு எதிராக பொது வேட்பாளரை அறிவிப்பது தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கருத்து தெரிவித்தார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாது என்றார். தொடர்ந்து பேசிய அவர், போக்குவரத்து நெரிசலான மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய இடத்தில் புதிய சட்டமன்றத்தை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது ஏற்புடையது அல்ல என்றும் கூறினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் டி.டி.வி. தினகரன் கூறியதாவது; “திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நிஜத்தில் வில்லனாகவும் இருப்பவர் விஜய். நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை தவெகவுக்கு எதிராக நிறுத்துவது ஏற்கத்தக்கது. அது நல்ல யோசனை. அதனை கூட்டணி கட்சிகளோடு கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும்.
போக்குவரத்து நெரிசலான, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய இடத்தில் புதிய சட்டமன்றத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது ஏற்புடையது அல்ல. தமிழக முதல்வரின் வீட்டுக்கு அருகிலேயே சட்டமன்றம் அமைக்க திட்டமோ என்ற சந்தேகம் எழுகிறது.
அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளது. அதிமுக கூட்டணியில் அமமுக இணைந்துள்ளது. இரண்டு கட்சிகளும் இணைக்கப்படும் என்பது போன்ற செய்திகளில் உண்மையில்லை” இவ்வாறு தெரிவித்தார்.
