Politics
காங். - பா.ஜ.க. நெருக்கடி திணறும் விஜய்! -மாறும் அரசியல்களம்!

வீரியமாக கிளம்பியிருக்கும் ஆளுங்கட்சிக்கு அணைபோட தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தனித்தனியாக திட்டம் போட, ‘நம்பிக்கையில்லா தீர்மானமே கொண்டு வந்தாலும் அதையும் பாத்துக்கலாம் என த.வெ.க. ஒரு திட்டம் போட... மூக்கணாங்கயிற்றின் ஒரு முனையை பா.ஜ.க.வும், மறுமுனையை காங்கிரசும் இழுத்துக்கொண்டிருப்பதால், கடிவாளம் போட்ட குதிரையாக திணறிக்கொண்டிருக்கிறார் விஜய் என்பதுதான் தற்போதைய தமிழகத்தின் அரசியல் கள நிலவரம்.
ஆட்சியமைக்க அறுதிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணிக் கட்சிகளின் தயவோடு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் முதல்வர் விஜய் மீதும், அவரது ஆட்சியின் மீதும் குறுகிய காலத்திலேயே அதிருப்தி அலை உருவாகத் துவங்கியிருக்கும் நேரத்தில், "அடுத்த குறி பிரைம் மினிஸ்டர் தான்' என டார்கெட் வைத்து நகர்ந்துகொண்டிருக்கிறது த.வெ.க.
இது தொடர்பாக, சமீபத்தில் கருத்துக் கணிப்புகள் வெளிவந்தவுடன், "ராகுல்காந்தியை பிரதமராக முன் நிறுத்தா விட்டால் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்'’என கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் நடந்த கூட்டத்தின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் கூறியது, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேபோல, மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பதையும் உறுதிசெய்ய முடியாத நிலையில் இடைத்தேர்தலை எப்படியாவது கொண்டுவந்து, அதில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் முழுமூச்சாக இறங்கியிருக்கிறார் விஜய். அதன் காரணமாகவே நீதிமன்றத்தில் முறையீடும் செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டிலேயே இப்படி யிருக்கும் சூழலில், முதல்வர் விஜய் டெல்லிவரை தாவ தயாராக இருப்ப தாக தகவல் வெளியானாலும், ‘அத்தனையும் பா.ஜ.க.வின் சூழ்ச்சிதான்’ என அடித்துக் கூறுகிறார்கள் காங்கிரஸ் கட்சியின் சில முக்கிய பிரமுகர்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர்கள், "தமிழ்நாட்டில் தங்களால் நேரடியாக ஆட்சியைப் பிடிக்கவே முடியாது என்பது உறுதியாகத் தெரிந்த பிறகுதான் அவர்கள் போட்டிருந்த "பிளான் -பி' திட்டப்படி விஜய் மூலம் மறைமுக மாக தமிழகத்தை பா.ஜ.க. ஆட்சி செய்து கொண்டிருக்கிறது என்பதை டெல்லிக்கு நெருக்கமான பலரும் அறிவார்கள். அதே போலத்தான், தற்போது விஜய்யின் செல்வாக்கை உயர்த்துவதாக போலியான வீடியோக்கள் மற்றும் ஷார்ட்ஸ் பரப்பி, அதை வைத்து சர்வேயும் நடத்தி முடித்திருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணமே, காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, தெலுங்கானா, ஹிமாச்சல் பிரதேஷ், ஜார்க்
கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் விஜய்யின் செல்வாக்கை பயன்படுத்தி வாக்குகளைப் பிரித்து பா.ஜ.க.வை அங்கு வெற்றிபெற வைப்பதுதான் அவர்களது முக்கியமான நோக்கம். இப்படிச் செய்வதால், ராகுல் காந்தியின் செல்வாக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, அவரை சீனிலிருந்து ரூல் அவுட் பண்ணிவிடலாம் எனவும் நம்புகிறது பா.ஜ.க.ஆக மொத்தத்தில், பா.ஜ.க. என்ன சொல்லுகிறதோ அதைத்தான் செய்து கொண்டி ருக்கிறார் விஜய். இனிமேலும் அதைத்தான் செய்வார். மறுத்தால் என்ன நடக்கும் என்பது அவருக்கே தெரியும்'' என சூசகமாகக் கூறினார்கள்.
ஒருபுறம் பா.ஜ.க., மறுபுறம் காங்கிரஸ் என நெருக்கடி அதிகரித்துவரும் நேரத்தில், முதலில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரத் தயாராகி வருகின்றன தி.மு.க.வும் அ.தி.மு.க.வும். இப்படி, பல முனைகளில் இருந்தும் ஆளுங்கட்சியை குறிவைக்கும் அம்புகளால் மனஉளைச்சலுக்கு ஆளான முதல்வர் விஜய், அமைச்சர்களைக்கூட சந்திப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் பூதாகரமாக விஸ்வரூபமெடுத்து வருகிறது. புஸ்ஸி ஆனந்தாக இருந்தாலும் சரி, தலைமைச் செயலாளராகவே இருந்தாலும் சரி, ஜெகதீஷ் பழனிச்சாமி மூலமே முதல்வரை தொடர்புகொள்ள வேண்டிய நிலையிலிருப்பதால் நிர்வாக ரீதியாகவும் நெருக்கடிகளை சந்தித்துவருகிறது த.வெ.க. அரசு.
அதேபோல, இன்னொரு விஷயத்தையும் அரசல்புரசலாக கசியவிடுகிறது டெல்லி வட்டாரம். ஏற்கனவே, கரூர் விவகாரம் சி.பி.ஐ.யின் கையிலிருக்கும் நிலையில், முதல்வர் விஜய்யின் தேர்தல் பிரமாண பத்திரத்தில் 100 கோடிக்கு மேல் மறைக்கப்பட்ட விவகாரமும் விஸ்வரூப மெடுத்து வருவதால், அதை கையில் எடுத் திருக்கும் தி.மு.க., உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்றுவிட்டது. இதனால், முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. பதவிக்கு ஆப்பு வரலாம் என்பதோடு, அதைவிட பெரிய பிரச்சினை களும் அவருக்கு வரலாம் என்பதை உணர்ந்த அமைச்சரவையின் விளையாட்டுப்பிள்ளை ஒருவர், முதல்வர் நாற் காலிக்கு குறி வைத்தி ருப்பதாகவும் டெல் லிக்கு நெருக்கமான சிலர் கூறுகிறார்கள்.
ஆக மொத்தத்தில் எது எப்படியிருந்தா லும், த.வெ.க.வில் தற்போது வேர்விடத் துவங்கியிருக்கும் அதிகார மோகம், இன்னும் ஓரிரு மாதங்களில் அதிகார யுத்தமாக மாறினாலும் ஆச்சரியப்பட ஏது மில்லை!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)