Arts, culture, entertainment and media
Gladiators : எப்படி இருக்கு அஜித்தின் கிளாடியேட்டர்ஸ் ட்ரெய்லர்..? இணையத்தில் கொண்டாடும் ரசிகர்கள்..
ட்ரெய்லரை தியேட்டரில் பார்த்த ரசிகர்களில் அதன் சில காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அஜித்தின் கார் ரேஸ் தொடர்பான கிளாடியேட்டர்ஸ் படத்தின் ட்ரெய்லர் இன்று குறிப்பிட்ட சில தியேட்டர்களில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. அதன் சில காட்சிகளை சமுக வலைதளங்களில் ரசிகர்கள் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.
குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து அஜித் கார் பந்தையங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதற்கு அஜித் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கிடையே அஜித் பங்கேற்கும் கார் பந்தைய காட்சிகள், ரேஸில் அவருக்கு இருக்கும் ஆர்வம் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி இயக்குனர் ஏ.எல். விஜய் 90 நிமிடங்கள் கொண்டதாக கிளாடியேட்டர்ஸ் என்ற படத்தை உருவாக்கியுள்ளார்.
அந்த படத்தின் ட்ரெய்லர் இன்று குறிப்பிட்ட சில திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.
அஜித்தின் குடும்பத்தினர், கார் பந்தைய நிபுணர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் கருத்துகளுடன் விறுவிறுப்பாக ட்ரெய்லர் உள்ளதென்று ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
Chicken Storage Tips | ஃப்ரிட்ஜில் சமைக்காத சிக்கனை எத்தனை நாட்கள் சேமித்து வைக்கலாம்?
ஃப்ரிட்ஜில் சிக்கனை எத்தனை நாட்கள் வைப்பது பாதுகாப்பானது?
அதனைச் சரியாகப் பதப்படுத்தும் முறைகள் என்னென்ன?
வீக்-எண்ட் சிக்கன் வாங்கும் முன்னாடி இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
