Arts, culture, entertainment and media
தியேட்டரில் டிரெய்லர்; அஜித் ரசிகர்களுக்கு உற்சாக அப்டேட்!

நடிகர் அஜித் குமார் தற்போது கார் ரேஸில் பிஸியாக இருந்து வரும் நிலையில் அவரது ரேஸ் தொடர்பான பயணமும் ஆவணப்படமாக ‘கிளாடியேட்டர்ஸ்’ எனும் தலைப்பில் உருவாகி வருகிறது. இதில் அஜித்தின் ரேஸ் பயணம் மற்றும் அதில் அவர் எதிர்கொண்ட சவால்கள் குறித்து பேசப்படுகிறது. இப்படத்தை அஜித்தை வைத்து கிரீடம் படம் இயக்கிய ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். அப்படத்திற்கு இசையமைத்த ஜிவி பிரகாஷே இதற்கும் இசையமைக்கிறார்.
முதலில் இப்படத்தின் முன்னோட்டம் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியானது. அதில் அஜித்தின் ரேஸ் தொடர்பான பேட்டிகள் மற்றும் ரேஸ் ஓட்டும் வீடியோக்கள் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து வெளியான மோஷன் போஸ்டரில் அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீசஸ் இப்படத்தை வழங்குவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதையடுத்து வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கோல்டன் டிரோபி ஃபிலிம் புரொடக்ஷன் வழங்குவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித்குமார் படத்தை தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. இதனால் எப்போது படம் ரிலீஸ் என்ற எதிர்பார்ப்போடு அஜித் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் படத்தின் ஸ்பெஷல் டிரெய்லர் நேரடியாக திரையரங்கில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் செப்டம்பர் 6ஆம் தேதி மாலை 6.40-க்கு வெளியாகும் என திரையிடப்படும் தியேட்டர் லிஸ்டும் வெளியிடப்பட்டுள்ளது. இது அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
#Gladiators Special Trailer Premiere on September 6
Music by @gvprakash@SureshChandraa@rajakrishnan_mr@editoranthony#SandeepKVijay@madhankarky@DoneChannel1@swathysekaran@AbdulNassarOffl#Gladiators… pic.twitter.com/xRrL0rrsP0
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)